ரூ.200 இனி செல்லாதா? திரும்ப பெறும் ரிசர்வ் வங்கி – என்ன காரணம்?
ரூ. 200 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ரூ. 200 நோட்டு
2016ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன. அதன்பின் ரூ.500 மற்றும் ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.
தொடர்ந்து, பொதுமக்கள் இதனை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்த தொடங்கினர். இதனையடுத்து 2023ல் ரிசர்வ் வங்கி ரூ. 2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு?
இந்நிலையில் தற்போது ரூ.137 கோடி மதிப்புள்ள ரூ. 200 நோட்டுக்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக ரூ.200 நோட்டுகள் திரும்பப் பெறப்படுமா அல்லது செல்லாதவை என அறிவிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால், ரூ. 200 நோட்டுக்கள் அதிக தேய்மானம் அடைந்ததுடன் கிழந்ததால் அவை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 633 கோடி மதிப்புள்ள ரூ. 500 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.