;
Athirady Tamil News

கூட்டமைப்பில் திருடர்களை சேர்த்து வைத்திருந்தோம் – எம். ஏ சுமந்திரன்

0

திருடர்கள் திருந்தி விட்டார்கள் என நம்பி கூட்டமைப்பில் சேர்த்தோம். அவர்கள் திருந்தவில்லை. தற்போதும் கட்சியின் பெயர்கள் சின்னங்களை திருடுகிறார்கள் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம், ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக விழா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரின் பொதுவான சின்னத்தை திருடி விட்டார்கள். சின்னத்தை திருடியவர்கள் அதற்கு முன்னர் எங்களுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை திருடினார்கள். திருடுவது என்பது அவர்களுடைய வாழ்க்கை வழிமுறையாகவே இருந்ததிலுக்கிறது.

ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம்பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி கூட்டமைப்பிற்குள் சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை.

அதேபோல எங்கள் கட்சியிலிருந்து வெளியேறிய ஒருவர் அபலைப் பெண்ணுக்கு மதுபானசாலை உரிமம் கொடுத்தேன் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இப்படியானவர்களை மக்கள் இனம் கண்டு ஓரம் கட்ட வேண்டும்.

அதேவேளை தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் கொள்கைப்பிடிப்பில் வெளியேறுவதெனில் தேர்தல் காலத்தில் வெளியேறாமல் வேறு நேரத்தில் வெளியேறிருக்கலாம். தேர்தல் காலங்களில் வெளியேறுவர்களை குறித்து மக்களுக்கு அவதானம் இருக்கின்றது. அதனை நாம் மக்களுக்கு சொல்லத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.