;
Athirady Tamil News

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை

0

டபிள்யு.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் (Arjun Aloysius) உள்ளிட்ட மூவருக்கு 6 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் (colombo magistrate court) இன்று (14.10.2024) இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

பெறுமதி சேர் வரி (வற்) ஏய்ப்புச் சம்பவம் தொடர்பில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய வருமான வரி

அரசிற்கு சொந்தமான 3.5 பில்லியன் ரூபா பெறுமதி சேர் வரி (VAT) பணத்தை செலுத்தாமை தொடர்பில் தேசிய வருமான வரி திணைக்களத்தினால் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதேவேளை, இடைநிறுத்தப்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பிலான ஆவணங்கள் அதிகளவில் காணப்படுவதால் அது தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி
விசேடமாக, ‘மத்திய வங்கி பிணைமுறி மோசடி’ , ‘சிரிலிய சவிய’ மற்றும் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, கடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் விரைவில் மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவினர் மூலம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்னிலைப்படுத்தப்படும் முறைப்பாடுகள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப பிழைகள் காரணமாக கடந்த காலங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது ஒத்திவைக்கப்பட்ட அநேகமான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.