மறைந்த ரத்தன் டாடாவுக்கு மரியாதை செலுத்த அரசு எடுத்த முடிவு: முதலமைச்சர் அறிவிப்பு
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயரை பல்கலைக்கழகத்திற்கு வைக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தனது 86வது வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
உலக அளவில் அவரின் மறைவுக்கு தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
மும்பையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ரத்தன் டாடாவின் உடல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் அரசு மரியாதையுடன் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மராட்டிய மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்திற்கு ரத்தன் டாடாவின் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் இனி ‘ரத்தன் டாடா மராட்டிய மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம்’ என அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.