மூன்று நாட்களுக்கு முடக்கப்படும் பாகிஸ்தான் தலைநகர்
பாகிஸ்தானின் (Pakistan) தலைநகர் இஸ்லாமாபாத்தில் மூன்று நாட்களுக்கு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு பாகிஸ்தான் – இஸ்லாமாபாத்தில் இன்றும் (15) நாளையும் (16) நடைபெறவுள்ளது.
மாநாட்டையொட்டி நகரில் உள்ள பாடசாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாட்டுக்காக சீனப் பிரதமர் லி கியாங் (Chinese Premier Li Qiang) பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்துக்கு (14.10.2024) விஜயம் மேற்கொண்டுள்ளார்.
11 ஆண்டுகளின் பின்னர் சீனப் பிரதமர் ஒருவர் பாகிஸ்தானுக்குச் செல்வது இதுவே முதல் முறை என்பதுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் லியை விமான நிலையத்தில் வரவேற்றுள்ளார்.
இதேவேளை, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் நல்லுறவு குறித்து விவாதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ‘வழக்கமாக அரசுத் தலைவர்களின் உயர்நிலைக் கூட்டங்களின் பிரதமர்களும், அரசுத் தலைவர்களின் பிற கூட்டத்தில் அமைச்சர்களில் ஒருவரும் பங்கேற்பர்.
ஷாங்காய் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் செல்கிறேனே தவிர, இந்தியா- பாகிஸ்தான் உறவு குறித்து கலந்துரையாட அல்ல என்று கூறியுள்ளார்.
பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, கிா்கிஸ்தான், கஜகஸ்தான் , தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஒன்பதாவது உறுப்பினராக கடந்த ஆண்டு ஜூலையில் தான் ஈரான் சோ்ந்தது. இந்த அமைப்பு செல்வாக்கு மிக்க பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு கூட்டமைப்பாக இருப்பது
இந்நிலையில், பாகிஸ்தானின் தலைநகருக்கு மூன்று நாட்களுக்கு பொதுமுடக்கம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.