தென்கொரியாவுடன் மோதலைத் தூண்டும் வடகொரியா: சாலைகள் குண்டு வைத்து தகர்ப்பு
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் செய்துள்ள ஒரு விடயம், தென்கொரியாவுடன் மோதலைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
சாலைகள் குண்டு வைத்து தகர்ப்பு
வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில், வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலுள்ள சாலைகளில் சில பகுதிகளை கிம் ஜாங் உன் குண்டு வைத்து தகர்த்துள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
அத்துடன், வடகொரியாவின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென்கொரிய ராணுவம், எல்லையின் தென் பகுதியிலுள்ள சில பகுதிகளுக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
வடகொரியா அதற்கு பதிலடி கொடுத்ததா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதற்கிடையில், கிம் பெரிய அளவில் தென்கொரியாவுக்கு பதிலடி கொடுக்கமாட்டார் என்றே நிபுணர்கள் கருதுகிறார்கள்.
அப்படி அவர் தென்கொரியா மீது தாக்குதல் நடத்தினால், தென்கொரிய, அமெரிக்க கூட்டுப்படைகள் கிம்முடைய வாழ்வுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும் என்பதே அதற்குக் காரணம் ஆகும்.