இஸ்ரேலுக்கு பேரிடி: யுத்த டாங்கிகளை தாக்கி அழித்த ஹிஸ்புல்லா
தெற்கு லெபனானின் (Lebanon) ரம்யாவின் புறநகரில் (Outskirts of Ramyah) இஸ்ரேலிய இராணுவத்திற்குச் சொந்தமான மூன்று புல்டோசர்கள் மற்றும் இரண்டு யுத்த டாங்கிகளை தாக்கி அழித்ததாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா போராளிகள் குழு, ஏவுகணையுடன் ரம்யாவின் புறநகர்ப் பகுதிக்கு முன்னேறும் முயற்சியின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழப்பு
அத்தோடு, குறித்த தாக்குதலினால் இஸ்ரேலிய இராணுவ தரப்பிலிருந்து உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
மேலும், வெளியாகியுள்ள மற்றொரு அறிக்கையின் படி, மூன்று புல்டோசர்கள் மற்றும் ஒரு மெர்காவா டாங்கியை ரம்யாவின் புறநகரில் வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் மூலம் ஹிஸ்புல்லாக்கள் குறிவைத்து தாக்கியதாகவும், இது அவற்றின் அழிவுக்கும் உள்ளே இருந்தவர்களிடையே உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்
இதேவேளை, ஹிஸ்புல்லாக்களின் மூன்றாவது அறிக்கையில், தனது போராளிகள் ரம்யா கிராமத்திற்கு அருகே இஸ்ரேலியப் படைகளை பீரங்கி குண்டுகளால் குறிவைத்ததாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த மூன்று மணி நேரத்தில், தெற்கு லெபனான் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கில் (கிழக்கு லெபனானில்) வெவ்வேறு பகுதிகளில் 12 இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.