வங்கியில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.16 லட்சம்: இந்தியருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் விதித்த தண்டனை
வங்கி கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட தொகையை திருப்பி செலுத்தாக இந்தியாவை சேர்ந்த நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்தியருக்கு சிறை தண்டனை
இந்தியாவை சேர்ந்த 47 வயதான பெரியசாமி மதியழகன் என்ற நபரின் வங்கி கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட S$25,000 (தோராயமாக ₹16 லட்சம்) தொகையை திரும்ப செலுத்த தவறியதை தொடர்ந்து சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்கு ஒன்பது வார சிறை தண்டனை விதித்துள்ளது.
தன்னுடைய வங்கி கணக்கில் தவறுதலாக வந்த தொகையை தனது தனிப்பட்ட கடன்களை அடைக்க பயன்படுத்தியதும், மேலும் இந்தியாவில் உள்ள தனது குடும்பத்திற்கு தொகையின் சிறிய பகுதியை அனுப்பி வைத்ததும் தெரியவந்த நிலையில், அக்டோபர் 14ம் திகதி அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட பெரியசாமி மதியழகன் 2021ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை பிளமிங் மற்றும் பொறியியல் நிறுவனத்தின் பணியாற்றி வந்துள்ளார்.
சரியான உரிமையாளர், தவறை கண்டுபிடித்து, வங்கி மற்றும் பெரியசாமியின் முன்னாள் முதலாளியின் மூலம் நிதியை மீட்டெடுக்க முயற்சித்தார்.
ஆனால், முகவரி குழப்பத்தால், பணத்தின் உரிமையாளரின் தொடர்பு முயற்சிகள் தோல்வியடைந்தன. இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண் மே 2023 இல் பொலிஸில் புகார் அளித்துள்ளார்..
மதியழகன் பணத்தை செலவழித்ததாக ஒப்புக்கொண்டதோடு, பணத்தை திரும்ப செலுத்தவும் திட்டத்தையும் கோரியுள்ளார்.
ஆனால் இன்று வரை அவர் எந்த பணத்தையும் திரும்ப செலுத்தாத நிலையில் அவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்கு ஒன்பது வார சிறை தண்டனை விதித்துள்ளது.