சுவிஸ் தொழிலதிபர் மகள் உகாண்டாவில் கைது: ஜனாதிபதிக்கு நேரடி கடிதம் எழுதிய பங்கஜ் ஒஸ்வால்!
இந்திய வம்சாவளி சுவிஸ் தொழிலதிபரின் மகள் உகாண்டாவில் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட பிரபல சுவிஸ் தொழிலதிபர் மகள்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல சுவிஸ் தொழிலதிபர் பங்கஜ் ஒஸ்வால்(Pankaj Oswal), தனது 26 வயதான மகள் வசுந்தரா ஒஸ்வால்(Vasundhara Oswal) உகாண்டாவில் சட்டவிரோதமாக சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக உகாண்டா ஜனாதிபதிக்கு சுவிஸ் தொழிலதிபர் பங்கஜ் ஒஸ்வால் எழுதிய நேரடி கடிதத்தில், தனது மகளுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், குடும்பத்தினர் அல்லது சட்ட ஆலோசகர்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வசுந்தரா ஒஸ்வால் மீது சுமத்தப்பட்டுள்ள தண்டனை
PRO இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநரான வசுந்தரா, கடந்த அக்டோபர் 1ம் திகதி முதல் “கார்ப்பரேட் மற்றும் அரசியல் சூழ்ச்சி” காரணமாக விசாரணை இல்லாமல் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.
விலைமதிப்புள்ள பொருட்களை திருடியதுடன், நிறுவனத்திடம் இருந்து $200,000 கடன் வாங்கிய முன்னாள் ஊழியர் செய்த பொய்யான குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னுடைய மகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வசுந்தரா-வை இழிவுபடுத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், சட்ட ஆலோசகர் அல்லது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளாமல் 90 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நிபந்தனையற்ற விடுதலைக்கு நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும் ஜாமீனில் விடுதலை செய்வதைத் தடுக்க பொலிஸார் ஏற்றுக் கொள்ள முடியாத குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாகவும் விஸ் தொழிலதிபர் பங்கஜ் ஒஸ்வால் தெரிவித்துள்ளார்.