ரெட் அலர்ட் எதிரொலி.. இன்று சென்னை மாவட்ட பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறையா?
பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
ரெட் அலர்ட்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இரவு முதல் தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இந்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள்,
புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. எனவே தி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் கடந்த 2 நாட்களாக இந்த நான்கு மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
விடுமுறையா?
ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தெற்கு ஆந்திரா நோக்கி கரையைக் கடந்ததால் சென்னையில் அதி கனமழைக்கான வாய்ப்பு குறைந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த கனமழை எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது.
இன்று பிற்பகலுக்கு மேல் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இதேபோல் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.