;
Athirady Tamil News

நண்பரைக் கொன்று தின்ற ரஷ்ய ராணுவ வீரர்… உக்ரைனிலிருந்து வீடு திரும்புவதால் அச்சத்தில் மக்கள்

0

சுமார் ஓராண்டுக்கு முன் ரஷ்யா உக்ரைனை ஊடுருவிய நேரத்தில், எதிர்பாராத ஒரு விடயம் நடந்தது.

ஆம், எளிதாக உக்ரைனை கைப்பற்றிவிடலாம் என புடின் நினைக்க, அவர் நினைத்ததற்கு மாறாக, உக்ரைன் கடுமையாக பதிலடி கொடுத்ததால், ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட வேகமாக குறைய ஆரம்பித்தது.

உக்ரைன் போரில் பயங்கர குற்றவாளிகள்
ஆகவே, சிறைச்சாலைகளிலிருந்த பயங்கர குற்றவாளிகளை உக்ரைனுக்கு அனுப்பினார் புடின்.

அப்படி அவர்கள் உக்ரைனுக்கு போரிடச் சென்றால், அடுத்த ஆண்டே மீண்டும் நாட்டுக்குத் திரும்பிவிடலாம், சிறை செல்லத் தேவையில்லை என்பதுதான் நிபந்தனை!

ஆக, தன் நண்பரைக் கொன்று, அவரது இதயத்தை சமைத்து சாப்பிட்ட Dmitry Malyshev என்னும் பயங்கர குற்றவாளி,

இரண்டு இளம்பெண்களைக் கொன்று அவர்கள் உடல்களைக் கூறுபோட்ட Alexander Maslennikov என்னும் நபர் ஆகியோரும் ரஷ்யாவுக்காக போரிட உக்ரைனுக்குச் சென்ற பயங்கர குற்றவாளிகளில் அடங்குவர்.

இப்படி பயங்கர குற்றச்செயல்களில் ஈடுபட்டு 10 முதல் 25 ஆண்டுகள் வரை தண்டனை பெற்ற சில குற்றவாளிகள், கடந்த ஆண்டு உக்ரைனுக்கு போருக்குச் சென்றதால், தற்போது அவர்கள் வீட்டுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், அவர்கள் வீடு திரும்புவது குறித்த செய்தி வெளியானதால், அவர்களுடைய அக்கம்பக்கத்து வீடுகளில் வாழ்வோர் அச்சத்திலும், கவலையிலும் ஆழ்ந்துள்ளார்கள்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.