ஜேர்மனியில் 100 பயணிகளுடன் பயணித்த ரயில் தடம்புரண்டது: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்
ஜேர்மன் மாகாணமொன்றில், சுமார் 100 பயணிகளுடன் பயணித்த ரயில் ஒன்று தடம்புரண்டதில் ரயிலின் சாரதிக்கு காயம் ஏற்பட்டது.
100 பயணிகளுடன் பயணித்த ரயில் தடம்புரண்டது
நேற்று இரவு, ஜேர்மன் மாகாணமான Saarlandஇன் தலைநகரான Saarbrücken என்னுமிடத்திலிருந்து பிராங்பர்ட் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்று, ரயில் பாதைகளில் விழுந்து கிடந்த பாறைகளில் மோதி தடம்புரண்டது.
அந்த ரயிலில் சுமார் 100 பயணிகள் பயணித்த நிலையில், ரயிலின் சாரதிக்கு காயம் ஏற்பட்டுள்ளது, பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அவர்கள் அனைவரும் வேறொரு ரயில் ஏற்றப்பட்டு பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.
விபத்திலும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பியதாக தெரிவித்துள்ள பொலிஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர், ரயில் இடதுபுறமாக தள்ளப்பட்டதால் அவர்கள் தப்பியதாகவும், அதுவே வலதுபக்கமாக தள்ளப்பட்டிருந்தால், அங்கு அணை ஒன்றின் தடுப்புச் சுவர் உள்ளதால், நிலைமை மோசமாகியிருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.