துருக்கியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
துருக்கியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு துருக்கியின் மலாத்யா மாகாணத்தில் உள்ள காலே நகரில் நேற்று(16) இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அத்துடன், இந்த நிலநடுக்கும் அருகில் உள்ள தியார்பகீர், எலாஜிக், சன்லியுர்ஃபா மற்றும் துன்செலி மாகாணத்திலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
190 பேர் வரை பாதிப்பு
இதன்போது, மக்கள் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்கள் மற்றும் பூங்காக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், நிலநடுக்கத்தின் அச்சத்தினால் வீட்டின் ஜன்னல் வழியாக குதித்ததில் பலர் காயம் அடைந்துள்ளதாக எலாஜிக் மேயர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிலநடுக்கத்தால் 190 பேர் பாதிக்கப்பட்டதுடன் அவர்களில் 43 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளதாக துருக்கி உள்துறை மந்திரி அலி யெர்லிகாயா கூறியுள்ளார்.
மீட்பு நடவடிக்கை
மாலத்யாவில் மொத்தம் நான்கு கட்டடங்கள் இந்த நிலநடுகத்தில் பாதிப்படைந்துள்ளதுடன் எலாஜிக்கில் நான்கு பேர் சேதமடைந்த கட்டடத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், மலாத்யா மற்றும் எலாஜிக் பகுதிகளில் பாடசாலைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வருடமும் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மலாத்யா மாகாணம் பாதிக்கப்பட்ட நிலையில் துருக்கியில் மாத்திரம் 53 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.