34 ஆண்டு அரசியலுக்கு விடை கொடுக்கும் கனடிய அரசியல்வாதி
கனடாவின் ஒன்றாரியோ மாகாண சபாநாயகர் 34 வருட அரசியல் வாழ்க்கைக்கு விடை கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என ஒன்றாரியோ மாகாண சபாநாயகர் டெட் ஆர்னட் தெரிவித்துள்ளார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் டெட் ஆர்னட் மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றார்.
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
மாகாண மக்களுக்கு சேவையாற்றக் கிடைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் மாகாண மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்த அயராது பாடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டில் முதல் தடவை ஆர்னட் சட்டமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.