ஹரி மேகன் பிரிவு குறித்து பரவும் வதந்திகள்… ’Trial separation’ என வெளியாகியுள்ள தகவல்
இளவரசர் ஹரி தனியாக பயணிக்கிறார், அவரது மனைவியான மேகன் தனியாக பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.
இருவரும் பிரிய இருப்பதாக வதந்திகள் பரவியவண்ணம் உள்ளன. ஆனால், உண்மை நிலை என்ன?
ஹரி மேகன் பிரிந்து வாழ்கிறார்களா?
ஹரியும் மேகனும் பிரிந்து வாழ்கிறார்களா என்பது தொடர்பில் வித்தியாசமான கருத்துக்கள் நிலவிவருகின்றன.
மேகனுடைய ரசிகர்களில் முக்கியமான ஒருவரான Emma Pagnoni Fabiani என்பவர், ஹரியும் மேகனும் தனித்தனியே பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளது உண்மைதான் என்கிறார்.
ஆனால், அவர்களுடைய திருமணத்தில் எந்த பிரச்சினையும் இல்லை, தனித்தனியே பணி செய்தாலும் அவர்கள் இணைபிரியாத தம்பதியராகத்தான் இருக்கிறார்கள் என்கிறார் எம்மா.
அதே நேரத்தில், RadarOnline என்னும் ஊடகம், ஹரி பிரித்தானியாவை மிஸ் பண்ணுவதாகவும், பழைய வாழ்க்கைக்குத் திரும்ப ஏங்குவதாகவும் அதனால் இருவருக்குமிடையிலான உறவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
இப்படி இருவரும் தனித்தனியே ஆளுக்கொரு பக்கமாக பயணிப்பது, Trial separation’ ஆக இருக்கக்கூட வாய்ப்பு உள்ளது என்கிறது அந்த ஊடகம். உண்மை என்ன என்பது ஹரிக்கும் மேகனுக்கும்தான் வெளிச்சம்!