வெளிவரும் இஸ்ரேலின் கோர முகம்: மொத்தமாக அழிய போகும் ஈரான்
ஈரானை (Iran) முழுமையாகத் தாக்கி அழிக்கும் சில மோசமான ஆயுதங்களை இஸ்ரேல் (Israel) தன்வசம் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான செய்திகளை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. ஈரானை அழிப்பதற்காகவே கடந்த 20 ஆண்டுகளாக இரகசிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் மேற்கொண்டு வந்துள்ளது.
மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் இது அந்த பிராந்தியத்தில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெதன்யாகுவின் உத்தரவு
இந்நிலையில், இஸ்ரேல் தனது அண்டை நாடான ஈரானை அழிக்கத் தயாராக உள்ளதாகவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) உத்தரவிற்கு மட்டுமே அந்நாடு இராணுவம் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் நாட்டின் சில முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரம், எப்போது இந்தத் தாக்குதல் நடக்கும் எந்த இடங்கள் மீது தாக்குதல் நடாத்தப்படவுள்ளது என்பது குறித்த இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
பயங்கரமான ஆயுதங்கள்
ஈரானை தாக்கி அழிக்க உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு இஸ்ரேல் இதுவரை பல பில்லியன் டொலர்களை செலவழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இந்த சில ஆயுதங்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தபோது தான் இஸ்ரேலிடம் இந்தளவுக்குப் பயங்கரமான ஆயுதங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இஸ்ரேலிடம் வலிமையான ஆயுதங்கள் பல இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதில் பெரும்பாலான ஆயுதங்கள் ஈரானைக் குறிவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மோசமான ஏவுகணை
கடந்த மாதம் ஏமன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதுபோன்ற ஒரு ஆயுதம் தான் பயன்படுத்தப்பட்டது. அதுவே ஈரானுக்கு கிட்டதட்ட ஒரு எச்சரிக்கை போலவே இருந்தது.
மேலும், இஸ்ரேல் தங்களிடம் உள்ள F-15 போர் விமானங்களையும் ஈரான் மனதில் வைத்துக் கொண்டு மாற்றி வடிவமைத்துள்ளதாம். இதன் மூலம் ஈரானை இஸ்ரேலால் முழுமையாகத் தாக்கி அழிக்கக் கூட முடியும்.
அத்துடன், இஸ்ரேல் வசம் இருக்கும் குண்டுகள் ஈரானின் எண்ணெய் கிடங்குகளை தாக்கி அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆயுதங்களை எல்லாம் வைத்து ஒரே நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தினால் பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும். அது அடுத்த உலகப் போரைக் கூட தொடங்க வாய்ப்பு இருப்பதாகவே அஞ்சப்படுகிறது.