புதிய வாடகைத்தாய் தடை சட்டம்..!இத்தாலி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
வாடகைத்தாய் தடை சட்டத்தை விரிவுப்படுத்தும் இத்தாலியின் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய வாடகைத்தாய் தடை சட்டம்
இத்தாலியில் வாடகைத்தாய்(Surrogacy) முறையை பயன்படுத்தி குழந்தைகளை பெற்றெடுப்பது தடை செய்யப்பட்டு இருப்பதுடன் அவை சட்ட விரோதமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த வாடகைத்தாய் தடை சட்டத்தை மேலும் விரிவுபடுத்தி புதன்கிழமை இத்தாலி நாடாளுமன்றத்தில் புதிய தடை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, தம்பதிகள் இனி வெளிநாடுகளுக்கு சென்று வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதும் சட்டவிரோதமாக ஆக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டு சிறை தண்டனை
இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு குறைந்தப்பட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், €1 மில்லியன் (£836,000) அபராதமும் விதிக்கப்படும்.
இந்த சட்டம், பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி-யால் கொண்டுவரப்பட்டது.
இதன் மூலம் இத்தாலியின் பாரம்பரிய குடும்ப மதிப்புகள் ஊக்குவிக்க முயல்வதாக கூறப்படுகிறது.
முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டத்தால் LGBTQ தம்பதிகளால் சட்டப்பூர்வ பெற்றோராக மாறுவது சிக்கலாக்கியுள்ளது என்று எதிர் கருத்துடையவர்கள் வாதிட்டு வருகின்றனர்.