எங்களை அழிக்கவே முடியாது… ஹமாஸ் படைகளின் மூத்த நிர்வாகி சூளுரை
தலைவர்களை படுகொலை செய்வதால், ஹமாஸ் படையை அழித்துவிடலாம் என்பது வெறும் பகல் கனவு என்று அந்த அமைப்பின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போர் முடிவுக்கு வருவதன் தொடக்கம்
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் அறிவித்துள்ளனர். அது தொடர்பாக காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ள நிலையில், காஸா மீதான போர் முடிவுக்கு வருவதன் தொடக்கம் இதுவென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேலும், சின்வார் கொல்லப்பட்டதை அடுத்து, ஹமாஸ் படைகள் இனி போர்முனைக்கு திரும்பும் வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஹமாஸ் படைகளின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான Basem Naim,
சுதந்திரம் மற்றும் கண்ணியம் தேடும் மக்கள் தலைமையிலான ஒரு விடுதலை இயக்கம் ஹமாஸ் என்றும், எளிதில் அழித்துவிட முடியாது என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
போராட்டங்களை ஒடுக்கி விடலாம்
பாசம் நைம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதற்கு முன்னர் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்களின் பெயர்களை பட்டியலிட்டு, இதனால் ஹமாஸ் இயக்கம் அழிந்துவிடவில்லை என்றும், அதன் பின்னர் பலமடங்கு உத்வேகத்துடன் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் தலைவர்களை படுகொலை செய்வதால், இயக்கத்தை அழித்து விடலாம் மற்றும் பாலஸ்தீன மக்களின் போராட்டங்களை ஒடுக்கி விடலாம் என இஸ்ரேல் கருதுவதாகவெ தெரிகிறது என குறிப்பிட்டுள்ள நைம்,
இடர் வந்த போதெல்லாம் அதிக வலுவுடன் எதிர்கொண்டதாகவும், புகழ் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். எதிரிகளால் சூழ்ச்சியில் கொல்லப்படும் தலைவர்கள் அனைவரும் வருங்கால சந்ததியினர் சுதந்திர பாலஸ்தீனத்தை நோக்கிய பயணத்தை தொடர ஒரு உந்து சக்தி என்றார்.