ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்த புலம்பெயர்வோர் படகு: பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த துயரம்
ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் புலம்பெயர்வோர் படகொன்று கவிழ்ந்ததில், பச்சிளங்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்த புலம்பெயர்வோர் படகு
நேற்று, அதாவது, வியாழக்கிழமை இரவு, வடக்கு பிரான்சிலுள்ள Wissant என்னும் கடற்கரையிலிருந்து புலம்பெயர்வோர் பலருடன் பிரித்தானியா நோக்கிப் புறப்பட்டுள்ளது படகொன்று.
அதில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான ஆட்கள் ஏற்றப்பட்டிருந்ததால் படகு கவிழ்ந்துள்ளது.
படகு கவிழ்ந்ததில், படகிலிருந்தவர்கள் தண்ணீரில் விழ, தண்ணீரில் தத்தளித்தவர்களில் 65 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ஆனால், தண்ணீரில் மயக்கநிலையில் குழந்தை ஒன்று மீட்புக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்தக் குழந்தை இறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இம்மாதம் 5ஆம் திகதியும், இதேபோல ஆங்கிலக்கால்வாயில் படகொன்றில் பயணித்தவர்களில் ஒரு மூன்று வயதுக்குழந்தை உட்பட நான்குபேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.