யாஹ்யா சின்வார் மரணத்தை உறுதிப்படுத்திய ஹமாஸ்! பிணைக் கைதிகள் விடுவிப்பு எப்போது?
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டத்தை ஹமாஸ் அமைப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தலைவர் மரணத்தை உறுதிப்படுத்திய ஹமாஸ்
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளுக்கு காரணமாக இருந்த ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார்(Yahya Sinwar) தெற்கு காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர்களால் கொல்லப்பட்டுள்ளார்.
டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு யாஹ்யா சின்வாரின் மரணத்தை இஸ்ரேல் உறுதிப்படுத்தி இருந்த நிலையில், ஹமாஸும் தற்போது அவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் மரணத்தை ஹமாஸின் உயர்மட்ட அரசியல் தலைவர் கலீல் அல் ஹய்யா உறுதிப்படுத்தியுள்ளார்.
பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா?
மேலும் ஹமாஸின் துணை தலைவரும், தலைமை பேச்சுவார்த்தையாளருமான கலீல் அல் ஹய்யா தொலைக்காட்சிக்கு அளித்த அறிக்கையில், தலைவர் யாஹ்யா சின்வாரின் மரணம் ஹமாஸை மேலும் பலப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனத்தின் நிலப்பரப்பில் உள்ள ஆக்கிரமிப்பு முழுமையாக நிறுத்தப்படும் வரை அக்டோபர் 7ம் திகதி சிறை பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார் என தெரிவித்துள்ளார்.
காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறுவதற்கு முன்பு பிணை கைதிகள் யாரும் உங்களிடம் திரும்ப மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.//// ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் மரணம் அவர்களின் சாபமாக மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.