;
Athirady Tamil News

சீக்கிய பிரிவினைவாதி மீதான கொலைச் சதி! இந்திய அதிகாரி மீது அமெரிக்கா வழக்கு பதிவு

0

சீக்கிய பிரிவினைவாதி மீதான கொலை முயற்சி சதியில் இந்திய அதிகாரி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய உளவு அதிகாரி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

அமெரிக்காவில் வசித்து வரும் சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுனை(Gurpatwant Singh Pannun) கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியில் முன்னாள் இந்திய உளவு அதிகாரி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

கொலைக்கு ஆளமர்த்தியது மற்றும் பண மோசடி ஆகியவற்றின் கீழ் முன்னாள் இந்திய உளவு அதிகாரியான விகாஷ் யாதவ்(Vikash Yadav) மீது வியாழக்கிழமை நியூயார்க் தெற்கு மாவட்ட அமெரிக்க வழக்காடு அலுவலகம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

குர்பத்வந்த் சிங் பண்ணுன், இந்தியாவில் சுதந்திர சீக்கிய நாடு உருவாக வேண்டும் என்ற கொள்கையை ஆதரிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர் ஆவார். இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக அமெரிக்காவில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் முன்னாள் இந்திய உளவு அதிகாரி விகாஷ் யாதவ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசு தரப்பில் இருந்து பதில் இல்லை என தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரான நிக்கில் குப்தா பிராகாவில் உள்ள சிறைகளில் இருந்து இந்த ஆண்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதை அடுத்து வெளிவந்துள்ளது.

கனடா முன்வைக்கும் குற்றச்சாட்டு
காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய அரசு தலையீடு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதில் இருந்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து வருகின்றன.

கனடாவின் தொடர் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சமீபத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் திரும்ப பெறுவதாக இந்திய அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.