அரியணையேறும் வரிசையில் மூன்றாவது இளவரசி: ஆனால் அவர் என்ன செய்ய விரும்புகிறார் தெரியுமா?
பிரித்தானிய இளவரசரும் வருங்கால மன்னருமான இளவரசர் வில்லியமுடைய மகளான சார்லட், அரியணையேறும் வரிசையில் மூன்றாவது நபராக இருக்கிறார்.
ஆனால், அவர் வேறு திட்டம் வைத்திருப்பதாகத் தெரிகிறது!
அரியணையேறும் வரிசையில் மூன்றாவது நபர்
பிரித்தானிய இளவரசரான வில்லியம் மன்னரானபின், அவருக்கு அடுத்து அரியணையேறும் வரிசையில் இருப்பவர் குட்டி இளவரசர் ஜார்ஜ்.
இளவரசர் ஜார்ஜுக்கு அடுத்தபடியாக அரியணையேறும் வரிசையில் இருப்பவர் குட்டி இளவரசி சார்லட்.
ஆனால், சார்லட் வளர்ந்ததும் ஒரு செவிலியராக விரும்புகிறாராம்.
சமீபத்தில், வில்லியமும் அவரது மகன்களும் பிரித்தானிய மருத்துவ அமைப்பான National Health Service (NHS)இன் சேவைகள் குறித்து சார்லட்டுக்கு விவரித்தார்களாம்.
அதைக் கேட்டதிலிருந்து, தான் வளர்ந்ததும் ஒரு செவிலியராக ஆக விரும்புவதாக தெரிவித்துள்ளாள் சார்லட்.
சார்லட் ஏற்கனவே மிகவும் அன்பும் மற்றவர்கள் மீது இரக்கமும் காட்டும் குணம் கொண்ட பிள்ளை ஆவாள்.
ஆகவே, அவள் வளர்ந்தால், தான் சொன்னதுபோலவே செவிலியர் ஆனாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்கிறார் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்.