;
Athirady Tamil News

மனைவியுடன் கட்டாய உறவில் ஈடுபடுவது பாலியல் வன்கொடுமையா? உச்சநீதிமன்றம் பதில்!

0

மனைவியுடன் கணவன் கட்டாய உறவில் ஈடுபடுவது சரியா? தவறா?

தாம்பத்திய உறவு

டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனைவியை கட்டாயப்படுத்தி தாம்பத்திய உறவு கொள்வது குற்றம் என அறிவிக்கக் கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இதற்கு உயர்நீதிமன்றம் முரண்பட்ட தீர்ப்பை வழங்கியதாக கூறி மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்தது.

தொடர்ந்து, விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. அதில், ‘திருமண உறவில் பாலியல் வன்கொடுமையைக் குற்றமாக்குவது திருமண உறவுகளை பாதிக்கும். சமூகத்தில் கடுமையான குழப்பத்திற்கும், இடையூறுக்கும் வழிவகுக்கும்.

நாடாளுமன்ற கருத்து

கணவனுக்கான சட்ட பதுகாப்பு நீடிக்க வேண்டும். எனவே இதனை குற்றமாக்குவது சரியல்ல’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ந்திய ஜனநாயக மகளிர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கருணாநிதி, “பாலியல் உறவில் பெண்ணின் சம்மதம் மிகவும் முக்கியம்.

கணவனுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் சட்டப்பிரிவை ரத்து செய்யுங்கள்” என்று வாதிட்டார். இதற்கு விளக்கமளித்த நீதிபதிகள், கணவனுக்கான சட்டப்பாதுகாப்பு அரசியல் சாசனம் அளிக்கும் சமத்துவ உரிமை, வாழ்வுரிமை, தனியுரிமை ஆகியவற்றை மீறுவதாக நீங்கள் சொல்கிறீர்கள்.

ஆனால், இந்த சட்டப்பிரிவை நிறைவேற்றிய போது, 18 வயதை தாண்டிய மனைவியுடன் கணவன் கட்டாய உறவில் ஈடுபடுவது பாலியல் வன்கொடுமை அல்ல என்பதுதான் நாடாளுமன்றத்தின் கருத்து. இது அரசியல் சாசனம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. எங்கள் முன்பு இரண்டு தீர்ப்புகள் உள்ளன.

கணவனுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் சட்டப் பிரிவு செல்லுமா என்பதுதான் மைய பிரச்சனை. அதுபற்றி முடிவு செய்வோம்” எனத் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் மனுவுக்கு பதில் அளிக்குமாறும் மனுதாரர்களை நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.