குடும்பத்துடன் சுரங்கத்தில் நடமாடும் சின்வார்!இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி
இஸ்ரேலில் (Israel) கடந்த வருடம் ஒக்டோபர் 07 ஆம் திகதி தாக்குதல் நடத்துவதற்கு முதல் நாள் (ஒக்டோபர் 06) ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) தனது குடும்பத்தினருடன் சுரங்கத்தில் நடந்து செல்வதாக காணொளியான்றை இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) வெளியிட்டுள்ளது.
தெற்கு பகுதியில் ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களுக்கு ஒரு நாள் முன்னதாக இந்த காணொளி பதிவாகியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
காணொளி
குறித்த காணொளியின் முதல் பகுதி, சின்வார் இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண்ணுடன் பைகளை எடுத்துச் செல்வதைக் காட்டுகிறது.
🎥DECLASSIFIED FOOTAGE:
Sinwar hours before the October 7 massacre: taking down his TV into his tunnel, hiding underneath his civilians, and preparing to watch his terrorists murder, kindap and rape. pic.twitter.com/wTAF9xAPLU
— LTC Nadav Shoshani (@LTC_Shoshani) October 19, 2024
அதனை தொடர்ந்து, பல தடைவைகள் ஹமாஸ் தலைவர் பைகள் மற்றும் தண்ணீர் போத்தல்களையும் எடுத்துக் கொண்டு செல்கிறார்.
இறுதியாக இரண்டு சிறுவர்களில் ஒருவருடன் சின்வார் தலையணை மற்றும் மெத்தை போன்றவற்றை எடுத்துச் செல்வது காட்டப்படுகிறது.
சின்வாரின் மரணம்
இந்த நிலையில், சம்பவம் பதிவான திகதி மற்றும் நேரம் காணொளியில் காட்டப்படுவதுடன், இந்த காட்சிகளை இஸ்ரேல் இராணுவம் சில மாதங்களுக்கு முன்னதாகவே கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஒரு வருட தேடுதலின் பின்னர் இஸ்ரேல் பாதுகாப்பு படை, (Israel) ஒக்டோபர் 7, 2023 தாக்குதல்களின் மூளையாக இருந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்ட சின்வாரை கடந்த புதன் கிழமை கொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.