ஜேர்மனியில் புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சியைத் தடை செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம்
புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட வலதுசாரிக் கட்சியை தடை செய்ய ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று விருப்பம் தெரிவித்துள்ளது.
புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சியைத் தடை செய்ய விருப்பம்
சமீப காலமாக ஜேர்மனியில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி கவனம் ஈர்த்து வருகிறது.
சில இடைத்தேர்தல்களில் மக்கள் AfD கட்சிக்கு ஆதரவளிக்க, ஆளும் மற்றும் பிற கட்சிகளுக்கு அந்த விடயம் அச்சத்தை உருவாக்கியது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று AfD கட்சிக்கு தடை விதிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.
குடியரசு அமைப்புக்கே AfD கட்சி அச்சுறுத்தலாக உள்ளதாகவும், ஆகவே அக்கட்சிக்கு தடை விதிப்பது குறித்து, அரசியல் சாசன நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்றும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களை, அவர்கள் ஜேர்மன் குடிமக்களாகவே இருந்தாலும், ஜேர்மனியை விட்டு வெளியேற்றவேண்டும் என AfD கட்சியினர் ரகசிய கூட்டம் ஒன்றில் திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.