பிரித்தானியாவில் மைதானத்தில் பெண்ணை சூழ்ந்த 4 பேர்: பாலியல் அத்துமீறல் விசாரணையை தொடங்கிய பொலிஸார்!
பிரித்தானியாவில் விளையாட்டு மைதானத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில், பொலிஸார் பாலியல் அத்துமீறல் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பெண் மீது தாக்குதல்
பிரித்தானியாவின் கேன்டர்பரியில்(Canterbury) உள்ள விளையாட்டு மைதானத்தில் பெண் ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை தொடங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணை ஒயிட்ஹால் சாலைக்கு அருகிலுள்ள டாட்லர்ஸ் கோவ் (Toddler’s Cove) விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத 4 ஆண்கள் நெருங்கியதாக கூறப்படுகிறது.
மைதானத்தின் சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து மற்றவர்கள் வெளியேறிய பிறகு, 4 பேர் கொண்ட கும்பலில் இருந்த 18 அல்லது 19 வயது மதிக்கதக்க கிழக்கு ஐரோப்பிய வெள்ளையர் பாதிக்கப்பட்ட பெண்ணை இரவு 9.30 மணியளவில் அணுகி பின்னர் தாக்கியதாக கென்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் வெளியிட்ட பொலிஸார்
]முதல் சந்தேக நபர் கருப்பு சுருள் தலைமுடியும், வெள்ளை நிற டிராக் சூட், மற்றும் சிறிய வெள்ளை நிற பையை இடுப்பில் அணிந்து இருந்ததாக பொலிஸார் அடையாளம் வெளியிட்டுள்ளனர்.
மற்றவர்களில் இருவர் அதே 18 அல்லது 19 வயதுடைய வெள்ளையர்கள் என்றும், மற்றொருவர் கருப்பான தோல் கொண்டவராக இருந்தனர் என தெரிவித்துள்ளனர்.
விசாரணை
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விவரம் அறிந்தவர்கள் தகவல் வழங்க முன்வருமாறு அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் சிசிடிவி காட்சிகள் பரிசோதனை மற்றும் தடயவியல் சோதனைகளை பொலிஸார் முடுக்கி விட்டுள்ளனர்.