2028-க்குள் ஐரோப்பாவில் அதிகரிக்கும் மில்லியனர்களின் எண்ணிக்கை., ஆச்சரியமளிக்கும் பட்டியல்.!
2028-ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பாவின் மூன்று நாடுகளில் மில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக Adam Smith Institute ஆய்வு தெரிவித்துள்ளது.
மிகச் சிறந்த வளர்ச்சியை அடையவுள்ள மூன்று நாடுகளில் துருக்கி, ரஷ்யா, மற்றும் ஸ்வீடன் இடம்பிடித்துள்ளன.
இதில் ஸ்வீடன் மட்டும் தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளது, ஆனால் அது Eurozone நாடாக இல்லாது தொடர்ந்து இயங்கி வருகிறது.
ஆய்வின் முடிவுகள் பிரித்தானியாவிற்கு அதிர்ச்சியளிக்கின்றன. ஏனெனில் 2028-க்குள், பிரித்தானியாவின் மில்லியனர்கள் 20 சதவீதம் குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பாவின் மிகக் குறைந்த வளர்ச்சியிலான நாடாகும்.
அதே சமயத்தில், நெதர்லாந்து 5 சதவீத மட்டுமே இழக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியும் பிரான்சும் முறையே 15% மற்றும் 14% வளர்ச்சி காணும் என்று கணிக்கப்பட்டுள்ளன.
ஆனால் துருக்கி, பெரும் வித்தியாசத்துடன் முன்னணியில் உள்ளது. 2028க்குள், துருக்கியில் 34 சதவீதம் மில்லியனர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கு இடையில் துருக்கியில் 157 சதவீதம் செல்வ வளர்ச்சி நிகழ்ந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
மொத்த பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும், நிலங்கள் போன்ற சொத்துகளை வைத்திருக்கும் துருக்கியர்களின் செல்வம் விலைவாசி உயர்வால் பெருமளவில் அதிகரித்துள்ளது.
ரஷ்யாவும் அதன் எதிர்மறை சூழ்நிலைகள் மற்றும் உக்ரைன் போரின் பாதிப்புகளுக்கு இடையிலும் 23% மில்லியனர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ள நாடாக இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஆய்வு 36 நாடுகளை மதிப்பீடு செய்துள்ளது, இதில் தைவான் மிக அதிக வளர்ச்சி (51%) காணும் எனக் கூறப்பட்டுள்ளது.