;
Athirady Tamil News

ஹிஸ்புல்லா நிதிப் பிரிவு மீது இஸ்ரேல் குறி! பெய்ரூட் பகுதியில் பயங்கர வெடிப்பு சத்தம்

0

லெபனானின் பெய்ரூட் பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் கேட்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் குண்டு வீச்சு தாக்குதல்

லெபனானின் தலைநகரான பெய்ரூட் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பயங்கரமான குண்டு வீச்சு தாக்குதலின் சத்தம் கேட்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லாவின் நிதிப் பிரிவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்து இருந்த நிலையில், இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

எழுப்பப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக பெய்ரூட் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும் பெரும்பாலான மக்கள் அச்சத்தின் காரணமாக தெருக்களில் நிரம்பி காணப்படுவதாக ராய்ட்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.

நிதிப் பிரிவுகள் மீது இஸ்ரேல் குறிவைப்பு
தற்போதைய குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்பதற்கு முன்னதாக இஸ்ரேலிய ராணுவ செய்தி தொடர்பாளர், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அல் கர்ட் அல் ஹசன் சங்கத்தை (Hezbollah al Qard al Hassan Association) தாக்க இஸ்ரேலிய படைகள் திட்டமிட்டுள்ளனர், எனவே அவற்றுக்கு அருகில் உள்ள உள்கட்டமைப்பில் வசிப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள் என எச்சரித்து இருந்தார்.

லெபனான் முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா அல் கர்ட் அல் ஹசன் சங்கம் கிளை உள்ளன, அவற்றில் 15 கிளைகள் மக்கள் அடர்த்தியாக வாழும் பெய்ரூட் மற்றும் அதன் புறநகர்களில் உள்ளன.

ஹிஸ்புல்லா அல் கர்ட் அல் ஹசன் சங்கங்கள ஈரானிய ஆதரவு செயற்பாட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது மற்றும் ஆயுதம் வாங்க உதவுவது ஆகிய பணிகளை செய்து வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.