இன்னும் நான்கு ஆண்டுகள் தான் உயிருடன்… பிரித்தானிய பிரபலமொருவரின் பேச்சால் நடுக்கம்
ஆறு முறை ஒலிம்பிக் சைக்கிள் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற Chris Hoy, தமக்கு இனி 4 ஆண்டுகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக தெரிவித்துள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள் உறுதி
புற்றுநோயின் நான்காவது கட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள Chris Hoy, செப்டம்பர் மாதம் முன்னெடுத்த பரிசோதனையில் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இரண்டு நாட்களுக்கு பின்னர் மீண்டும் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில், புற்றுநோயின் நான்காம் கட்டத்தில் இருப்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் புற்றுநோய் சிகிச்சை எடுத்துக் கொள்வதாக கிறிஸ் ஹோய் வெளிப்படையாக அறிவித்திருந்தார்.
11 முறை உலக சேம்பியன் பட்டம் வென்ற கிறிஸ் ஹோய், நாளேடு ஒன்றில் தமது நிலை குறித்து தெரிவிக்கையில், இயற்கைக்கு மாறானதாக உணர்ந்தாலும், இதுவே இயல்பு என்றார்.
பிறக்கும் ஒவ்வொருவரும் ஒரு நாள் இறந்தாக வேண்டும், இது அதன் ஒரு பகுதி மட்டுமே என்றார். இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான 48 வயது கிறிஸ் ஹோய் தெரிவிக்கையில், கீமோ சிகிச்சையால் புற்றுநோய் குணமாகும் என்பதில் உத்தரவாதம் இல்லை, ஆனால் நம்பிக்கை அளிக்கும் வகையில் பலன் கிடைத்தது என்றார்.
புரோஸ்டேட் புற்றுநோய்
கிறிஸ் ஹோய் தற்போது உட்கொள்ளும் மருந்தானது 2011ல் முதலில் சோதனை முயற்சியாக உட்கொண்ட நோயாளிகளில் கால் சதவிகிதம் பேர்கள் இன்னமும் உயிருடன் உள்ளனர்.
ஹோயின் தாத்தா மற்றும் தந்தை இருவருக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் இருந்தது. தற்போது அதே புற்றுநோயுடன் கிறிஸ் ஹோயும் போராடி வருகிறார். மேலும், அவரது மனைவி சாராவும் (உடலில் உள்ள) திசுவின் ஒரு பகுதி இறுகிப் போதல் என்ற பாதிப்புக்கு கடந்த ஆண்டு இலக்காகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.