திடீரென அதிகரித்துள்ள பொருட்களின் விலை:முக்கிய கலந்துரையாடலில் ஜனாதிபதி
அரிசி, தேங்காய், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் நாளை (22) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலை அதிகரிப்பு
ஒரு கிலோ நாட்டு அரிசிக்கு 220 ரூபா கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த செயலாளர், நாடு அரிசியின் விலை உயர்வினால் இந்த கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்க முடியாது என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் இந்த கலந்துரையாடலில் அரிசி நெருக்கடி, தேங்காய் மற்றும் முட்டையின் விலை உயர்வு போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.