இந்த நோய் இருந்தால் மறந்தும் பாதாம் சாப்பிடாதீங்க.. ஆபத்து நிச்சயம்
பொதுவாக மனித உடலுக்கு ஆரோக்கியம் தரும் நட்ஸ்களில் ஒன்றாக பாதாம் பார்க்கப்படுகின்றது.
பாதாமில் உள்ள பல்வேறு புரதங்கள், வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்கின்றது.
இவ்வளவு பலன்கள் இருந்தாலும் சிலர் பாதாம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என கூறப்படுகின்றது.
அப்படி யாரெல்லாம் பாதாம் சாப்பிடக் கூடாது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பாதாம் சாப்பிட்டால் என்ன பலன்?
1. பாதாம் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம், பாஸ்பரஸ் ஆகிய ஊட்டசத்துக்கள் உள்ளன. இதனை தினமும் சாப்பிடுவதால் எடை இழப்பு, நல்ல எலும்பு ஆரோக்கியம், மனநிலை மேம்படுத்துதல், இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயை கட்டுபடுத்தல் ஆகிய பலன்களை கொடுக்கின்றது.
2. பாதாம் சாப்பிடுபவர்களுக்கு மார்பகப் புற்றுநோயின் அபாயம் தடுக்கப்படுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றது.
3. அதிக அளவு வேர்க்கடலை, அக்ரூட் பருப்புகள் ஆகிய தானியங்கள் சாப்பிடுபவர்களை விட பாதாம் சாப்பிடுபவர்களு்க்கு மார்பக புற்றுநோய் ஆபத்து வருவது குறைவாக இருக்கும் என சொல்லப்படுகின்றது.
4. பாதாம் இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனேற்ற அளவை கணிசமாக அதிகரித்து இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. அத்துடன் டைப் 2 நீரிழிவு நோயாளிகளும் பாதாம் உட்க் கொள்ளலாம். ஏனெனில் மெக்னீசியம் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகின்றது.
5. சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் பாதாம் சாப்பிடக் கூடாது.உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் பாதாம் சாப்பிடக் கூடாது. சளி, இருமல் பிரச்சனைகள் உள்ளவர்கள் பாதாம் சாப்பிடக் கூடாது என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
1. சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் பாதாம் சாப்பிடக் கூடாது என சொல்லப்படுகின்றது. இது அவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
2. உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் பாதாம் சாப்பிடக் கூடாது. தினமும் காலையில் பாதாம் சாப்பிடுவதால் எடை அதிகமுள்ளவர்களுக்கு கலோரிகள் அதிகமாக சேரும்.
3. சளி, இருமல் பிரச்சனைகள் உள்ளவர்கள் பாதாம் சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது அவர்களின் நிலையை மோசமாக்கலாம்.