வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு
2023/24 ஆண்டில் உள்நாட்டு இணைவரித்திணைக்களத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை 868,009 ஆக அதிகரித்துள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையர் ஜெனரல் W.A. செபாலிகா சந்திரசேகர இதனை தெரிவித்துள்ளார்.
2022/2023 மதிப்பீட்டு ஆண்டில், வருமான வரி செலுத்த வேண்டிய நபர்களின் எண்ணிக்கை 333,313 ஆகும்.
வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN Number) பதிவு செய்வதற்கும், தனிநபர்களை வருமான வரிக்கு பதிவு செய்வதற்கும் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் விளைவாக, உள்நாட்டு இணைவரி சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் 3.05.2023 அன்று வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்bருந்தது.
இதன்படி, வருமான வரி செலுத்த வேண்டிய நபர்களின் எண்ணிக்கை 534,696 ஆக அதிகரித்துள்ளது.
சொத்துக்களை வைத்திருப்பவர்கள் மீது அதிக கவனம்
வர்த்தகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சொத்துக்களை வைத்திருப்பவர்கள் போன்றவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களது வருமான அறிக்கைகளை இணையவழி முறையின் மூலம் சமர்ப்பிக்க முடியும் என்றும், பணம் செலுத்தும் பட்சத்தில் தபாலில் பணம் செலுத்தும் சீட்டு அனுப்பப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இணைய முறையைப் பயன்படுத்தி வருமான வரி செலுத்துவோருக்கு சிரமம் இருந்தால், அவர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அல்லது திணைக்களத்தின் பிராந்திய அல்லது நகர அலுவலகங்களுக்கு சென்று உதவியை பெறலாம் என்றும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.