எனது கணவருக்கு ஏற்பட்ட நிலை புடினுக்கும்… அலெக்ஸி நவல்னியின் மனைவி வெளிப்படை
புடினின் ஆட்சி காலத்திற்கு பின்னர் ரஷ்யாவின் ஜனாதிபதியாக வேண்டும் என்று மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவி விருப்பம் தெரிவித்துள்ளார்.
முடிவுக்குக் கொண்டுவர
ஜனநாயகத்துக்கான தனது கணவரின் போராட்டத்தைத் தொடரும் உறுதியையும் யூலியா நவல்னயா வெளிப்படுத்தியுள்ளார். மேலும், தேர்தலில் வேட்பாளராக பங்கேற்பேன். எனது அரசியல் எதிரி விளாடிமிர் புடின்.
அவரது ஆட்சியை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர அனைத்தையும் செய்வேன் என்றார். இருப்பினும், ரஷ்யாவுக்குள் நுழைந்தால் தீவிரவாத குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் தற்போது அவரது போராட்டம் நாடுகடத்தப்பட்ட நிலையில் உள்ளது.
விளாடிமிர் புடின் ஆட்சியில் இருக்கும் வரையில் தாம் ரஷ்யாவுக்கு திரும்புவதில்லை என்றும் நவல்னயா தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட அலெக்ஸி நவல்னி 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட்டார்.
ரஷ்ய சிறையில் புடின்
இந்த நிலையில் விசாரணைக் கைதிகளுக்கான காலனி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் மரணமடைந்தார். ரஷ்ய அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தி வந்ததால் அவரை புடினின் மிகவும் வெளிப்படையான விமர்சகராக மாற்றியது.
இதனிடையே, அலெக்ஸி நவல்னியின் மரணத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்றே ரஷ்ய நிர்வாகம் மறுத்துள்ளது. ஆனால் தமது கணவரின் இறப்புக்கு அர்வதேச சமூகமே காரணம் என நவல்னயா விமர்சித்துள்ளார்.
விளாடிமிர் புடினும் நீதியை எதிர்கொள்வதைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், ரஷ்ய சிறையில் புடின் தண்டனை அனுபவிப்பதை காண வேண்டும் என்றும், தமது கணவருக்கு ஏற்பட்ட நிலை புடினுக்கும் ஏற்பட வேண்டும் எனவும் நவல்னயா குறிப்பிட்டுள்ளார்.