பிரித்தானியாவில் நாயை அழைத்துச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! 3 மாதங்களுக்கு பின் 55 வயது நபர் கைது
பிரித்தானியாவின் Suffolk மாவட்டத்தில், தனது நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்ற 57 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பரிதாப உயிரிழப்பு
Suffolkயின் Brantham நகரில் கடந்த சூலை 4ஆம் திகதி Springer spaniel வகை நாயை Anita Rose (57) என்ற பெண் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றார்.
ஆனால் காலை 6.25 மணியளவில் Rose ரயில் பாதைக்கு அருகே தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார்.
அப்போது அதனை கவனித்த நபர் ஒருவர் ஆம்புலன்ஸை அழைக்க Anita Rose மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Cambridgeயில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் 4 நாட்களுக்குப் பிறகு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மூன்று மாதங்கள் கழித்து கைது
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் 20 மற்றும் 45 வயது ஆண்கள் மற்றும் திருடப்பட்ட பொருட்களை கையாள்வதாக சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய பெண் என மூவரை கைது செய்தனர்.
அதன் பின்னர் அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மூன்று மாதங்கள் கழித்து 55 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைதான அவரிடம் Martlesham பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.