பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிற்கு இன்று காலை புறப்பட்டு சென்றார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷ்யாவின் தலைமையில் நடைபெற உள்ளது.
ரஷ்யாவில் உள்ள காசான் நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, ரஷ்யாவுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, இன்று ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச உள்ளார்.
இதேபோன்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேச உள்ளார். இந்தியா – சீனா இடையே எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் ரோந்து செல்ல ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பிரதமர் மோடி – ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.