;
Athirady Tamil News

நடிகை சபிதாவின் கட்டிடத்துக்காக வைப்பிலிடப்பட்ட 62 கோடி எங்கே; கேள்வி எழுப்பும் அனுர அரசாங்கம்!

0

நடிகை சபிதா பெரேராவின் கணவருக்குச் சொந்தமான ராஜகிரியயில் அமைந்துள்ள டி.பி.ஜே. கோபுர கட்டிடத்தை விவசாய அமைச்சுக்கு குத்தகை அடிப்படையில் , கட்டிட உரிமையாளர்களிடம் வைப்புத்தொகையாக வைத்த 66 கோடி ரூபா, அரசாங்கத்திற்கு இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி காலத்தில் இந்த தொகை வழங்கப்பட்டதாகவும், எனினும் இதுவரை அந்த தொகை கிடைக்கவில்லை எனவும் , விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.எம். விக்கிரமசிங்க இன்று வெளிப்படுத்தியுள்ளார்.

முறைகேடாக வழங்கப்பட்ட தொகை

குறித்த கட்டிடம் மீளப் பெற்று பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் உரிய தொகை இதுவரை அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

விவசாய அமைச்சகத்தைப் பற்றி பேசினால், பல்வேறு முறைசாரா பரிவர்த்தனைகள் குறித்து எங்களுக்கு அறிக்கைகள் வருகின்றன. விவசாய அமைச்சகம் தனியாரிடமிருந்து ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்திருந்தது.

கட்டிடத்தை வாடகைக்கு எடுக்கும் போது, ​​66 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக அரசுப் பணத்தில் டெபாசிட் செய்து இருந்தால், அதற்கு வங்கியில் பத்திரம் பெறப்படும்.

ஆனால் அத்தகைய பத்திரம் எதுவும் பெறப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தற்போது இந்தக் கட்டிடம் ஒப்படைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. டெபாசிட் தொகையான 66 கோடி திரும்ப பெறப்படவில்லை, பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

நிதி விதிமுறைகளை மீறி குத்தகை ஒப்பந்தங்கள்
இதுகுறித்து, வழக்கறிஞரிடம் தெரிவித்து, தற்போது அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.

சட்டத்தின் மூலம் என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டறிய வேண்டும் என விவசாயத்துறை செயலாளர் தெரிவித்தார். அதேவேளை இந்த கட்டிடத்தை பராமரிக்க விவசாய அமைச்சு மாதாந்தம் 240 இலட்சம் ரூபாவை செலவிட வேண்டியிருந்தது.

இராஜகிரியில் விவசாய அமைச்சு கட்டிடமொன்றிற்கு மாற்றப்பட்ட போது இடம்பெற்ற , பொது நிதி துஷ்பிரயோகம் தொடர்பில் அப்போது அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழல்களை ஆராய்ந்த கோப் குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கவனமும் அதை வெளிக் கொண்டு வந்திருந்தது.

ஆணைக்குழுவின் முன்னிலையில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின்படி, குறித்த கட்டிடத்திற்காக அரசாங்கம் செலவிட்ட மொத்தத் தொகை கிட்டத்தட்ட இரண்டு பிலியன் ரூபாவுக்கு மேல் எனத் தெரியவந்துள்ளது.

அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு மட்டுமே இதுபோன்ற குத்தகை ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடியும் என்று கூறப்பட்டுள்ள நிதி விதிமுறைகளை மீறி, 5 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் குறித்த கட்டடத்துக்கான குத்தகை ஒப்பந்தங்களுக்கு, சட்டப்பேரவையின் ஒப்புதல் பெறப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

இந்தப் பின்னணியில்தான் குத்தகை எடுப்பதற்காக டெபாசிட் செய்யப்பட்ட 62 கோடி ரூபாய் டெபாசிட் தொகை இன்னும் மீள வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.