கணவருக்காக விரதமிருந்து அவருக்கே உணவில் விஷம் வைத்து கொன்ற மனைவி! நடந்தது என்ன?
கணவருக்காக கடும் விரதம் இருந்த மனைவி சில மணி நேரத்தில் உணவில் விஷம் வைத்து கணவரையே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவருக்கு உணவில் விஷம் வைத்த மனைவி
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் சைலேஷ் குமார் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி கடவுளுக்கு விரதம் இருந்து “கர்வா சவுத்” என்ற பண்டிகையை கொண்டாடி முடித்த சில மணி நேரத்தில் அவருக்கு உணவில் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் சைலேஷ் குமாருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட மனைவி இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்த வாக்குவாதம் சண்டையாக மாறி பின்னர் சமாதானமாகி இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவும் சாப்பிட்டுள்ளனர்.
உணவு சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் கணவர் சைலேஷ் குமார் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பொலிஸார் நடத்திய விசாரணையில் சைலேஷ் குமாரின் மனைவி தான் உணவில் விஷம் வைத்து அவரை கொன்றுள்ளார் என்பதை கண்டுபிடித்தனர்.
மேலும் கணவருக்கு விஷம் வைத்து கொன்ற மனைவியை பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளனர்.