அமெரிக்காவில் நடுவானில் ஹெலிகாப்டர் விபத்து: குழந்தை உட்பட 4 உயிரிழப்பு: வீடியோ
அமெரிக்காவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்து
அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு முன்னதாக R44 ஹெலிகாப்டர் ரேடியோ கோபுரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக ஹூஸ்டன் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
4 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் குறித்த அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
Helicopter crashes into a radio tower near downtown Houston, killing four people on board, including a child, fire officials said.
Houston authorities said the aircraft, a privately-owned R44 helicopter, went down just before 8 p.m. after taking off from Ellington Field, about… pic.twitter.com/l8YUu1D6L1
— Breaking Aviation News & Videos (@aviationbrk) October 21, 2024
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து கிட்டத்தட்ட 15 மைல் தொலைவில் உள்ள Ellington Field பகுதியில் இருந்து புறப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு உள்ளூர் அதிகாரிகள், பொலிஸார், மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர்.
The FAA will investigate. Media staging behind the Stellar Bank at Navigation and Ennis. pic.twitter.com/KRsPhjJdj0
— Houston Fire Dept (@HoustonFire) October 21, 2024
விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர் அரசு விமானம் இல்லை என்றும், அது தனியாருக்கு சொந்தமான சுற்றுலா ஹெலிகாப்டர் என்றும் ஹூஸ்டன் நகர சபை உறுப்பினர் மரியோ காஸ்டிலோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,பொதுமக்களிடம் விபத்து தொடர்பான சாட்சியங்கள் ஆதாரங்கள் எதுவும் இருந்தால் பொலிஸாரிடம் வழங்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.