பாலைவனத்தில் தனியாக சிக்கிக்கொண்ட இளம்பெண்: ஒரு சுவாரஸ்ய வீடியோ
துபாயில், பாலைவனத்தில் தனியாக சிக்கிக்கொண்ட இளம்பெண்கள் இருவர் உபேரில் ஒட்டகம் ஒன்றை புக் செய்வதைக் காட்டும் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.
ஒரு வைரல் வீடியோ
இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், இளம்பெண்கள் இருவர் பாலைவனத்தில் தனியாக சிக்கிக்கொண்டதையும், அவர்கள் அங்கிருந்து வெளியேற முயல்வதையும் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அவர்களில் ஒரு இளம்பெண், உபேரில் ஏதாவது வாகனம் புக் செய்யலாம் என முடிவு செய்கிறார்.
உபேரில் என்னென்ன வாகனங்கள் புக் செய்யலாம் என அவர் பார்க்கும்போது, ஒட்டகம் ஒன்றையும் புக் செய்யும் வசதி இருப்பது தெரியவரவே, வியப்படைந்த அந்த பெண் ஒட்டகத்தை புக் செய்கிறார்.
சிறிது நேரத்தில் உண்மையாகவே ஒருவர் ஒட்டகம் ஒன்றை நடத்திக்கொண்டுவர, ஆச்சரியத்தில் மூழ்கிப்போகிறார்கள் அந்தப் பெண்கள்.
அவர்களில் ஒரு பெண் ஒட்டகத்தில் ஏறிச் செல்லும் காட்சியுடன் முடிவடைகிறது வீடியோ.
இந்த வீடியோ மூன்று மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. என்றாலும், அதன் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.
சிலர், அது திட்டமிட்டு படம்பிடிக்கப்பட்ட காட்சி என்று கூறினாலும், துபாயில் அதுவும் சாத்தியம்தான் என சிலர் கூற, எப்படியும் வீடியோ வைரலாகிவிட்டது!