2025-ல் இந்தியர்களின் வருகையை அதிகம் எதிர்பார்க்கும் ஜேர்மனி
2025ல் இந்திய சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என ஜேர்மனி எதிர்பார்கிறது.
ஜேர்மனியில் இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை 2025-ஆம் ஆண்டில் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று ஜேர்மன் தேசிய சுற்றுலா வாரியம் (GNTB) அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு இந்தியர்கள் 10 லட்சம் இரவுகள் ஜேர்மனியில் தங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து பேசிய GNTB தலைமை செயல் அதிகாரி பெட்ரா ஹெடோர்ஃபர், “இந்த ஆண்டு இந்திய சுற்றுலாப் பயணிகள் 10 லட்சம் இரவுகள் தங்குவார்கள் என நம்புகிறேன், மேலும் 2025ல் இதனுடன் 1 லட்சம் இரவுகள் கூடும். இதனால் 10% கூடுதல் வளர்ச்சி அமையும்” என்றார்.
ஜனவரி முதல் ஜூலை 2024 வரை சுமார் 1.75 லட்சம் இந்தியர்கள் ஜேர்மனியைப் பார்வையிட்டுள்ளனர், அவர்கள் 5,23,076 இரவுகள் தங்கியுள்ளனர். 2023-ஆம் ஆண்டில் 2.32 லட்சம் இந்தியர்கள் ஜேர்மனிக்கு பயணம் செய்துள்ளனர்.
கோவிட்-பிந்தைய காலத்தில், 2023-ல் 8,26,000 இரவுகள் இந்தியர்கள் தங்கியியுள்ளனர், இது 2022ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 33% அதிகரிப்பு ஆகும்.
ஜேர்மன் தேசிய சுற்றுலா வாரியமானது, சூழலியல் மற்றும் பொருளாதார அமைச்சகத்தின் சார்பில் ஜேர்மனியை முன்னோக்கி சுற்றுலா தலமாக உருவாக்குவதற்குப் பணிபுரிகிறது.
இந்திய பயணிகளின் வருகை தொடர்ந்து உயர்ந்து வருவைத்து ஜேர்மானிய சுற்றுலாத்துறைக்குப் பாரிய ஆதரவை வழங்குகின்றன.