அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயம் இன்று (23.10.2024) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாது,
I had the pleasure of meeting and congratulating the new Governor of the Northern Province, Hon. Nagalingam Vedanayagam, on his recent appointment. We discussed his plans for the region and explored areas for U.S.-Sri Lanka collaboration, including boosting economic… pic.twitter.com/9AkK7Iklxw
— Ambassador Julie Chung (@USAmbSL) October 23, 2024
அமெரிக்க – இலங்கை கூட்டாண்மை
“அமெரிக்க – இலங்கை கூட்டாண்மைகளை முன்னிலைப்படுத்தி சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளேன்.
வடக்கு மற்றும் தெற்கில் உள்ள இலங்கையர்களின் முக்கிய இடங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்திலுள்ள வராலாற்று சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரம் கோவிலுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டேன்.
இலங்கையின் பன்முகப் பாரம்பரியத்திற்கான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், இது போன்ற கலாச்சார அடையாளங்களைப் பாதுகாப்பதற்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது.
இந்த விஜயத்தின் போது இங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு அமெரிக்க எவ்வாறு தொடர்ந்து உதவலாம் என்பதை அவதானிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.