;
Athirady Tamil News

கமலா ஹாரிஸுக்கு பில் கேட்ஸ் ஆதரவு., ரூ.1500 கோடி நன்கொடை.!

0

கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு பில் கேட்ஸ் நன்கொடை அளித்துள்ளார்.

உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும், Microsoft நிறுவனருமான தொழிலதிபர் பில் கேட்ஸ் (Bill Gates), அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

கமலா ஹாரிஸை ஆதரிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு பில் கேட்ஸ் 50 மில்லியன் டொலர் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 1470 கோடி ) நன்கொடை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர் Future Forward என்ற நிறுவனத்திற்கு நன்கொடை அளித்தார்.

ஆனால், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) குறித்து பில் கேட்ஸ் கவலை தெரிவித்துள்ளார். நண்பர்கள் மற்றும் மற்றவர்களுக்கு அவர் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் இது மதிப்பிடப்பட்டது.

ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் உலகளாவிய சுகாதார திட்டங்களுக்கான நிதி வெட்டப்படலாம் என்று கேட்ஸ் கவலை கொண்டுள்ளார். இருப்பினும், யாருடனும் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக பில்கேட்ஸ் கூறினார்.

நவம்பர் 5-ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள தேர்தல் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று பில் கேட்ஸ் கூறினார்.

சுகாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக தெளிவான போராட்டத்தை நடத்தும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக பில் கேட்ஸ் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.