புற்றுநோயிலிருந்து மீண்ட பிரித்தானியருக்கு லொட்டரியால் அடித்த அதிர்ஷ்டம்
பிரித்தானியர் ஒருவர் புற்றுநோயிலிருந்து விடுபட்டு ஓராண்டு ஆன நிலையில், அவர் வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு 500,000 பவுண்டுகள் பரிசு விழ, மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுள்ளார் அவர்.
லொட்டரியால் அடித்த அதிர்ஷ்டம்
இங்கிலாந்திலுள்ள Great Yarmouth என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ஜான் (John Lingard, 66).
கடந்த ஆண்டு ஜான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது சிறுநீரகங்களில் ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்கள் மருத்துவர்கள்.
அது நடந்து சரியாக ஒரு ஆண்டு ஆன நிலையில், ஜானுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. லொட்டரி வாங்கும் வழக்கம் கொண்ட ஜானுக்கு பரிசு விழுந்துள்ளதாக செய்திவர, தனக்கு 500.10 பவுண்டுகள் பரிசு கிடைத்துள்ளதாக எண்ணியுள்ளார் ஜான்.
ஆனால், தனக்கு ஒரு லொட்டரிச்சீட்டில் 500,000 பவுண்டுகளும், மற்றொரு சீட்டில் 10 பவுண்டுகளும் பரிசு விழுந்துள்ளது என்பது பிறகுதான் ஜானுக்கு புரிந்திருக்கிறது.
2023ஆம் ஆண்டு, Tenerife என்னும் தீவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பும்போதுதான் தனக்கு புற்றுநோய் பாதித்துள்ளது என்பதை அறிந்துகொண்டுள்ளார் ஜான்.
ஆகவே, இம்முறை தன் நண்பர்களுடன் சந்தோஷமாக அதே Tenerife தீவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளார் ஜான்.
அத்துடன் ஒரு வீடு வாங்கவும், தனக்கு நெருக்கமானவர்களை மகிழ்விக்கவும் கொஞ்சம் பணத்தை செலவிட திட்டம் வைத்துள்ளார் ஜான்.