;
Athirady Tamil News

ஓய்வூதியம்.. இரண்டு மனைவிகள் இருந்தால் யாருக்கு அது கிடைக்கும்? மத்திய அரசு முடிவு!

0

இரண்டு மனைவிகள் இருந்தால் ஓய்வூதியம் யாருக்கு செல்லும் என்று தெரிந்துகொள்ளலாம்.

ஓய்வூதியம்
மத்திய அரசு ஊழியர்கள் மரணம் அடைந்தால், அவரது மனைவி அல்லது கணவனுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஒருவேளை அவர்கள் இறந்து இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு தகுதி இருந்தால் ஊதியம் வழங்கப்படும்.

அதேபோல இறந்த ஊழியர்களுக்கு ஒரு மனைவி இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே இரண்டாவது மனைவியும் குடும்ப ஓய்வூதியம் உரிமை கோரும் போது பல பிரச்சணைகள் ஏற்படுகிறது. இது தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அதன் ஒவ்வொரு வழக்குகளிலும் ஒவ்வொரு விதமான தீர்ப்புகள் வருகின்றன. அதாவது, முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாம் மனைவியை திருமணம் செய்யக்கூடாது என்று திருமணச் சட்டம் சொல்கிறது. இதே சட்டத்தை மத்திய அரசின் ஓய்வூதிய விதிகள் கடந்த 2021ம் ஆண்டு உறுதி செய்கிறது.

மனைவிகள்
இந்த நிலையில், ஓய்வூதிய துறை அனைத்து மத்திய அரசு துறைகளுக்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டிருப்பது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 மனைவிகள் இருந்தால், இரண்டாம் திருமணம் சட்டபூர்வமானதா? என்று சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை செய்ய வேண்டும்.

இரண்டாம் திருமணத்தின் சட்டப்பூர்வ நிலை தீர்மானிக்கப்பட்ட பிறகே ஓய்வூதியம் வழங்குவது முடிவு செய்யப்படும். தற்போது மத்திய அரசு ஊழியரின் இறுதி சம்பளத்தின் 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். குறைந்தபட்சமாக ரூ.3,500-ம், அதிகபட்சமாக ரூ.27 ஆயிரம் வரையும் வழங்கப்படுகிறது.

ஆனால் அதில் சில விதிவிலக்குகள் உள்ளன. இது ஊழியர்கள் 7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருந்தால் குடும்ப ஓய்வூதியம் இறுதி சம்பளத்தின் 50 சதவீதம் வரை அதிகரிக்கும். பெற்றோர்கள் தாய், தந்தை என இருவரும் உயிருடன் இருந்தால் குடும்ப ஓய்வூதியம் இறுதி சம்பளத்தின் 75 சதவீதம் வரை வழங்கப்படும்.

ஒருவர் மட்டும் உயிருடன் இருந்தால் 60 சதவீதம் வரை வழங்கப்படும். ஊழியர்கள் பணி நேரத்தில் இறந்தால், 10 ஆண்டுகள் 50 சதவீதம் இறுதி சம்பளத்துடன் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு பின்னர் அது 30 சதவீதம் குறைக்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.