தென்கொரிய ஜனாதிபதி மாளிகையில் விழுந்த வடகொரிய குப்பை பலூனால் பரபரப்பு
வடகொரியா(north korea) அனுப்பிய குப்பை பலூன் தென்கொரிய(south korea) ஜனாதிபதி மாளிகையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் வடகொரியா தென்கொரியாவிற்குள் குப்பை பலூன்களை அனுப்பி ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஜனாதிபதி மாளிகையில் விழுந்த குப்பை பலூன்
இவ்வாறே தற்போது ஏவப்பட்ட குப்பை பலூன் தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்த குப்பையில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என்றும், குப்பைகள் ஜனாதிபதி மாளிகையில் விழுந்த போது ஜனாதிபதி அந்த வளாகத்தில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
மோதல் போக்கை கடைப்பிடிக்கும் வகையில் நடவடிக்கை
வடகொரியா GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலூன்களை தென்கொரியாவில் உள்ள சில முக்கிய இடங்களில் துல்லியமாக இறக்கி வருவதாகவும், வேண்டுமென்றே தென்கொரியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை வடகொரியா செய்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.