;
Athirady Tamil News

அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம்: பென்சில்வேனியாவில் அரசு விடுமுறைக்கான சட்டம் நிறைவேற்றம்!

0

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தீபாவளி பண்டிகைக்கு அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தீபாவளி பண்டிகை
பென்சில்வேனியாவில் வசிக்கும் கிட்டத்தட்ட 13 மில்லியன் மக்கள் தீபாவளி பண்டிகைக்கான அதிகாரப்பூர்வ விடுமுறையை பெற்றுள்ளனர்.

கவர்னர் ஜோஷ் ஷாபிரோ(Josh Shapiro), தீபாவளி பண்டிகையை அதிகாரப்பூர்வமாக மாநில பண்டிகை நாளாக அறிவிக்கும் சட்டத்தை இயற்றியதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

பென்சில்வேனியாவில் உள்ள இந்திய-அமெரிக்க சமூகத்திற்கு ஒரு முக்கியமான மைல்கல் அமைந்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் கிரெக் ரோத்மேன் மற்றும் நிக்கில் சாவல் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட செனட் மசோதா 402 தீபாவளி பண்டிகையின் நோக்கினை கொண்டாட விரும்புவதை காட்டுகிறது.

அரசு விடுமுறை
தீபாவளி பண்டிகை மசோதா அரசு விடுமுறையாக குறிக்கப்படும் அதே வேளையில், மாகாணத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிலையங்கள் மூடுவதை கட்டாயமாக்கவில்லை.

“தீபாவளியை அங்கீகரிப்பதன் மூலம், நாம் ஒரு அன்பான பாரம்பரியத்தை மதிப்பது மட்டுமல்ல, ஆசிய அமெரிக்க சமூகத்தின் பென்சில்வேனியாவுக்கு வழங்கிய வண்ணமயமான கலாச்சார பாரம்பரியத்தையும் மதிப்புமிக்க பங்களிப்பையும் கொண்டாடுகிறோம்” என்று கவர்னர் ஜோஷ் ஷாபிரோ தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.