பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் வெள்ளப்பெருக்கு: 26 பேர் உயிரிழப்பு, லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்!
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 26 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் வெள்ளப்பெருக்கு
பிலிப்பைன்ஸில் வெள்ளப்பெருக்கால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,50,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
லூசான்(Luzon) தீவின் வட கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டதோடு கனமழை கொட்டி தீர்த்ததால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.
அதிக அளவிலான உயிரிழப்புகள் மத்திய பிகோல்(Bicol) பிராந்தியத்தில் ஏற்பட்டன. நாகா(Naga) நகரத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்
சிவில் பாதுகாப்பு அலுவலகம், 1,63,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்ற மையங்களில் தஞ்சம் புகுந்ததாக தெரிவித்துள்ளது.
சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் அமைப்பு, புயலின் காரணமாக நாடு முழுவதில் குறைந்தது ஒரு டஜன் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், மத்திய வங்கி இரண்டாவது நாளாக வெளிநாட்டு பரிவர்த்தனை மற்றும் நாணய நடவடிக்கைகளை ரத்து செய்ததாகவும் தெரிவித்தது.
பிலிப்பைன்ஸில் பொதுவாக ஆண்டுக்கு சராசரியாக 20 வெப்பமண்டல புயல்களை பதிவாகிறது.
இவை பெரும்பாலும் கனமழை, சூறாவளி மற்றும் ஆபத்தான நிலச்சரிவுகளை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.