;
Athirady Tamil News

34 வருடங்களின் பின் காங்கேசன்துறையில் அஞ்சல் அலுவலகம்

0

காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகம் சுமார் 34 வருடங்களின் பின்னர் மீண்டும் காங்கேசன்துறையில் இயங்க ஆரம்பித்துள்ளது.

யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு கால பகுதியில் காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் வெளியேறிய போது , அங்கு இயங்கி வந்த காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகமும் வெளியேறி இருந்தது.

இந்நிலையில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காங்கேசன்துறை பகுதி இருந்தமையால் மாவிட்டபுரம் பகுதியில் தற்காலிகமாக அஞ்சல் அலுவலகம் இயங்கி வந்தது. தற்போது மீண்டும் காங்கேசன்துறை பகுதியில் அஞ்சல் அலுவலகம் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.

தபாலதிபராக சசிகலா சுதாகரன் மற்றும் தபாலக உத்தியோகஸ்தர்கள் தமது சேவையையாற்றி வருகின்றனர்.

காங்கேசன்துறை – பருத்தித்துறை வீதியில் சொந்த காணியில் அஞ்சல் அலுவலகம் அமைந்திருந்த போதிலும் மீண்டும் அதில் அஞ்சல் அலுவலகம் இயங்க கட்டட வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளமையால் அதற்கு பாரிய நிதி செலவு காணப்படுகிறது.

அதனால் காங்கேசன்துறை பகுதியில் தனியார் கட்டடம் ஒன்றினை தற்காலிக வாடகைக்கு பெற்று அதில் குறித்த அஞ்சல் அலுவலகம் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.