;
Athirady Tamil News

காசாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் : 38 பேர் பலி

0

காசாவில் (Gaza) உள்ள கான் யூனிஸ் (Khan Yunis) பகுதியில் இஸ்ரேல் (Israel) இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது நேற்று (25) நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் (Hamas) ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

போர் நிறுத்தம்
இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன் இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.

இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் அரசு போர் தொடுத்த நிலையில், ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு, இலட்சக்கணக்கானோர் காயமடைந்ததுடன் ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் தாக்குதல்
இந்தநிலையில், காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நேற்று (25) தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த தாக்குதலில் 38 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், காசாவில் போர்நிறுத்தம் கொண்டு வர சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.