பிரித்தானியாவின் மோசமான catfishing வழக்கு: ஆன்லைன் கொடூரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை
பிரித்தானியாவில் மிகப்பெரிய வழக்குகளில் ஒன்றாக கருத்தப்பட்ட ஆன்லைன் கொடூரன் அலெக்சாண்டர் மெக்கார்ட்னி-க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் கொடூரன்
அமெரிக்க பெண் ஒருவர் மற்றும் அவரது தந்தையை தற்கொலைக்கு தூண்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் வடக்கு அயர்லாந்தின் தெற்கு அர்மாஹைச் சேர்ந்த 24 வயது அலெக்சாண்டர் மெக்கார்ட்னி-க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அலெக்சாண்டர் மெக்கார்ட்னி(Alexander McCartney) ஸ்னாப்சாட் மற்றும் பிற சமூக தளங்களை பயன்படுத்தி கேட்ஃபிஷிங் (catfishing) என்று அழைக்கப்படும் ஆன்லைனில் வேற்று நபராக நடித்து ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் மீது பெண் ஒருவரை தற்கொலைக்கு தூண்டியது உட்பட 185 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
அவரது அறையில் இருந்து நூற்றுக்கணக்கான அத்துமீற படங்கள் மற்றும் சிறுமிகளின் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அலெக்சாண்டர் மெக்கார்ட்னி குறித்து விவரித்த பொலிஸார், அவர் ஆபத்தான, கொடூரமான பாலியல் குற்றவாளி என தெரிவித்துள்ளனர்.
மேலும் இவரால் கிட்டத்தட்ட 3,500 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் கணினி அறிவியல் மாணவரான அலெக்சாண்டர் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் அவர் மீது கொலை, 59 பேரை மிரட்டியது, 70க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் நடவடிக்கையில் ஈடுபட தூண்டியது ஆகிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளது.